dengu will not come after diwali
தீபாவளிக்கு பின் கட்டுப்படும்
தமிழகத்தில் பெரிய சவாலாக இருக்கும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உயிர்இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏன் இந்த நிலை?எதற்கும் கட்டுப்படுத்த முடியவில்லையே இந்த டெங்குவை என.....சுகதாரத்துறையே செய்வதறியாது திணறி வருகிறது.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் ஏதோ தெய்வ குற்றம் ஏற்பட்டு விட்டதோ என எண்ணிய முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூற, உடனே பல ரகசிய யாகங்கள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
முதல்வரின் அறிவுரையை ஏற்று அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பல இடங்களில் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்த சொல்லி கேட்டுக்கொண்டதாகவும்,அதன் பேரில் பல இடங்களில் ரகசிய யாகங்கள் நடத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், தீபாவளி நெருங்குவதால், வெடி வெடித்து, அதிலிருந்து கிளம்பும் நச்சு அலுமினியத் துகள்கள், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் வல்லமை உடையவை என்றும்,அதனால், தீபாவளி வந்து சென்றதும், டெங்கு கட்டுக்குள் வந்து விடும் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.
எப்படியாவது டெங்குவை கட்டுக்குள் கொண்டு வந்தால் போதும் என்ற நினைப்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் நாலா பக்கமும் அல்லாடிக் கொண்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ டெங்கு வரமால் இருந்தால் நல்லது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
