புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு அறிக்கையினை உடனே அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அ. அக்பர்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் லு.கபிரியேல், மாவட்ட பொருளாளர் க.ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.