Defamation case on actors ban - High Court order
கடந்த 2009ம் ஆண்டு பிரபல நாளிதழில் நடிகர்கள், நடிகைகள் பற்றி செய்தி வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து பத்திரிகையில் செய்தி வெளியாதற்காக நடிகர் சூர்யா, சத்யாராஜ் உள்பட பலரும் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனு நீதிபதி முரளிதரன், முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தார். மேலும், இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
