தீபாவளிப் பண்டிகைக்கு அரசுப்பேருந்துகள் இயக்குவது குறித்த அதிகாரிகளுடன் இன்று போக்குவரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் பல்ேவறு முடிவுகள் எடுக்கப்பட்டன

அதன்படி அக்டோபர் மாதம் தீபாவளிப்பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பணிகளுக்காக 19,500 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் அக்டோபர் 24-ம் ேததி முதல் இயக்கப்படும். அதேபோல சென்னை வரும் பயணிகளுக்காக 8,310 பேருந்துகள் இயக்கப்படும்

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23-ம் ேததி முதல் தொடஙு்கும். ஆன்-லைன் மூலம் முன்பதிவு ரெட்பஸ், பேடிஎம், அரசுப்போக்குவரத்து கழக இணையதளம் ஆகியவை மூலம் செய்யலாம்.

சிறப்பு பேருந்துகள் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் கடந்த ஆண்டைப்போன்று அமைக்கப்படுகிறது.


தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

தஞ்சை, விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் செல்லும் ேபருந்துகள் அனைத்தும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்
ஓசூர், ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம்ஆகிய மாவட்டங்களுக்குச் ெசல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து புறப்படும்

கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து புறப்படும். விஜயதசம், சரஸ்வதி பூஜைக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளும் இதே முறைப்படி சில மாற்றங்களுடன் இயக்கப்படும்.