death penalty for 2 people in dad daughter death case at tripur

திருப்பூரில் தந்தை, மகளை எரித்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு மரணத்தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் விசைத்தறி தொழிலாளி தங்கவேலு. இவரது மகள் மகேஸ்வரி. ஆறாம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தங்கவேலு தனது மகள் மகேஸ்வரியை டூவீலரில் அழைத்து கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தங்கவேலு மனைவி தமிழ்செல்வி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து தந்தை மகள் இருவரும் வெவ்வேறு ஊர்களில் எரித்து கொலை செய்யபட்டுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜியாவுதீன், குற்றவாளிகளான பல்லடம் பகுதியை சேர்ந்த செல்வம், கோவை வீர கேரளம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் ஆகிய இருவருக்கும் மரணத்தண்டனை விதித்து தீர்பளித்தார்.

மேலும் தெய்வசிகாமணி , நாகராஜ், ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் காலம் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.