Chandrachoodeshwarar hill temple: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பிரசாத புளியோதரையில் இறந்த குட்டி பாம்பு இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சந்திரசூடேஸ்வரர் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலை உச்சியில் அமைந்துள்ளது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெங்களுரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 42 கி.மீ தெலைவிலும் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். அருகாமையில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில் போல் அமைந்துள்ளது.
தனியார் மருத்துவமனை செவிலியர்
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பிரசாத கடை செயல்பட்டு வருகிறது. இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் மதனிகா (23) அவரது அக்கா ஜெயலட்சுமி (33) ஆகியோர் இந்த கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புளியோதரையில் குட்டி பாம்பு
பின்னர் பிரசாத விற்பனை கடையில் ரூ. 60 கொடுத்து இரு புளியோதரை வாங்கினர். பார்சலை பிரித்த போது, ஒரு டப்பாவில் இருந்த புளியோதரைக்குள், இறந்த நிலையில் குட்டி பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இததொடர்பாக கடைக்கு சென்று கேட்ட போது ஊழியர் அலட்சியாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,
அழிக்கப்பட்ட கோவில் பிரசாதங்கள்
புளியோதரையில் குட்டி பாம்பு உயிரிழந்த நிலையில் இருந்ததை அடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சாமிதுரை கூறியுள்ளார்.


