உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
Image credits: our own
Tamil
கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவில்
கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
Image credits: our own
Tamil
கொடியேற்றத்துடன் தொடங்கியது
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
Image credits: our own
Tamil
உள்ளூர் விடுமுறை
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை.
Image credits: our own
Tamil
அரசு அலுவலகங்கள்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 24ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.