தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
Image credits: our own
Tamil
நாள் ஒன்றுக்கு 100 கோடி வருமானம்
நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 முதல் 130 கோடி அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும்.
Image credits: our own
Tamil
வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி
அதே நேரத்தில் வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறும். குறிப்பாக தமிழக அரசு இயந்திரமே டாஸ்மாக் வருமானத்தில் தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.
Image credits: our own
Tamil
டாஸ்மாக் மூலம் கிடைத்த வருவாய்
சட்டப்பேரவையில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் டாஸ்மாக் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
Image credits: our own
Tamil
2021-2022-ம் நிதி ஆண்டு
அதில் 2021-2022-ம் நிதி ஆண்டில் மொத்த வருவாய் 36,050 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
Image credits: our own
Tamil
2022 - 2023 நிதி ஆண்டு
2022 - 2023 நிதி ஆண்டில் 44,121 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2021-22 ஆண்டைவிட சுமார் ரூ. 8 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் உயர்ந்துள்ளது.
Image credits: our own
Tamil
2023 - 2024 நிதி ஆண்டு
2023 - 2024 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.45,855 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Image credits: our own
Tamil
2024 – 2025ம் நிதியாண்டு
கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 2023 – 2024ஆம் நிதியாண்டை விட 2,489 கோடி ரூபாய் கூடுதல் வருவாய்.