ஹாப்பி நியூஸ்.. திருச்சி, காரைக்கால், நாகையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்.. எப்போது இருந்து ..?

காரைக்கால் - வேளாங்கண்ணி மற்றும் நாகை - வேளாங்கண்ணி இடையே இனி மீண்டும் முன்பதிவில்லா தினசரி சிறப்பு எகஸ்பிரஸ் இரயில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருந்து தொடங்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. 
 

Daily special Express from Trichy, Karaikal, Nagai to Velankanni

காரைக்கால் - வேளாங்கண்ணி மற்றும் நாகை - வேளாங்கண்ணி இடையே இனி மீண்டும் முன்பதிவில்லா தினசரி சிறப்பு எகஸ்பிரஸ் இரயில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருந்து தொடங்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. 

காரைக்கால் - வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சிறப்பு ரயில் :

நாளை முதல் கலை 9.40 மணிக்கு காரைக்கால் இருந்து புறப்படும் வண்டி எண். 06733 எக்ஸ்பிரஸ் இரயில் 10.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். பின்பு அங்கிருந்து வண்டி எண் 06734 எக்ஸ்பிரஸ் ஜூலை 29 ஆம் தேதி முதல் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, காரைக்காலில் மாலை 5.45 மணிக்கு வந்தடையும். மேலும் இந்த சிறப்பு இரயில் திருமலைராயன்பட்டினம், நாகூர், வெளிப்பாளையம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:செஸ் விளம்பரத்தில் மோடி படம் இடம்பெற்றிருக்க வேண்டும்..! நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்-மதுரை உயர்நீதிமன்றம்

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் : 

அதே போல் ஜூலை 30 ஆம் தேதி முதல் நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 4.15 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் வண்டி எண் 06841 எக்ஸ்பிரஸ் இரயில், அதே நாள் காலை 4.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மீண்டும் அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் எண். 06842 சிறப்பு எக்ஸ்பிரஸ் இரவு 9.45 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும்.  இந்த ரயில் நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க:ஆணையருக்கு 1 லட்சம், உதவி ஆணையருக்கு 50 ஆயிரம்.. ஆபராதம் போட்ட நீதிபதி.. ஆட்டிப்போன இந்து அறநிலையத்துறை.

இதே போல, நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு இரயில் நாளை முதல் இயக்கப்படும். நாளை காலை 11.30 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் காலை 11.55 மணிக்கும் வேளாங்கண்ணி வந்தடையும். அதே போல் வேளாங்கண்ணி -
நாகப்பட்டினம் சிறப்பு ரயில் , வேளாங்கண்ணியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் அதே நாள் காலை 11.20 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். அதுமட்டுமில்லாமல் திருச்சி - வேளாங்கண்ணி - திருச்சி இடையே தற்போது நாகப்பட்டினம் வரை இயங்கும் தினசரி சிறப்பு எகஸ்பிரஸ் இரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல் வேளாங்கண்ணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios