கமல் வாங்கி கொடுத்த காரில் இருந்து கொண்டு பெண் ஓட்டுநர் ஷர்மிளா இப்படி செய்யலாமா? 3 பிரிவுகளின் கீழ் வழக்கு!
சமீபத்தில் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பலராலும் வைரலாக பேசப்பட்டு வந்தவர் கோவை பெண் ஷர்மிளா. திமுக எம். பி. கனிமொழி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கூட வரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
யூடியூப் மூலம் பிரபலமான கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிராம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பலராலும் வைரலாக பேசப்பட்டு வந்தவர் கோவை பெண் ஷர்மிளா. திமுக எம். பி. கனிமொழி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கூட வரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார். தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
கோவையில் கடந்த 2ம் தேதி சத்திரோடு சங்கனூர் சிக்னல் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது "Instagram" பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy actஇன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?