மலேசியாவுக்கு கடத்த இருந்த 7.5 கிலோ போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பயணிகள் அனைவரையும் தரவாக சோதனை செய்தனர். அப்போது சுப்ரமணி என்ற பயணி ஊதுபத்தியில் மறைத்து வைத்து கடத்த இருந்த 7.5 கிலோ கொகைன் போதை பொருளை கண்டறிந்தனர்.

இதையடுத்து 3.5 கோடி மதிப்புள்ள அந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுப்ரமணியை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.