Asianet News TamilAsianet News Tamil

மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்ப பெற முற்றுகையிடும் வாடிக்கையாளர்கள்.! காரணம் என்ன.?

மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் பண்ட் நிறுவனத்தில் டெபாசிட் தொகை உடனடியாக கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு தங்கள் பணத்தை திரும்ப பெற ஒரே நேரத்தில் முயற்சிப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
 

Customers besiege Mylapore Hindu Finance Institute demanding refund KAK
Author
First Published Apr 8, 2024, 11:30 AM IST | Last Updated Apr 8, 2024, 11:30 AM IST

நிதி நிறுவனத்தில் சிக்கல்

நாட்டின் பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்றான மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தில் கிளைகள் பல இடங்களில் உள்ளது. இந்த சூழ்நிலையில், மயிலாப்பூர் மாட தெருவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் குவித்து வருகின்றனர். இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.  

வைப்பு த்தொகை மீதான வட்டிகள் தாமதமாகவும், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள் பகுதி, பகுதியாக வழங்கப்படுவதால் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை வைத்துள்ளனர். மொத்தமாக 525 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள்  மற்றும் மூத்த குடிமக்கள். 

Customers besiege Mylapore Hindu Finance Institute demanding refund KAK

நிதி நிறுவனத்தை முற்றுகையிடும் வாடிக்கையாளர்கள்

இந்தநிலையில் இந்த நிதி நிறுவனத்தில் மத்திய சென்னையில் உள்ள ஒரு அலுவலகம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதன் காரணமாக பீதியடைந்த வாடிகையாளர்கள் மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்தில் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக தொடர்ந்து கூடி வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்ப கேட்டு வருவதால் சிக்கலான நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு செக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் இரண்டு வாரம் கழித்து தேதி குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தினமும், டெபாசிட்தாரர்கள், அலுவலகத்திற்குச் சென்று, பல மணி நேரம் அமர்ந்து, நிவாரணம் கேட்டு வருகின்றனர். பெரும்பாலானவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. 

Customers besiege Mylapore Hindu Finance Institute demanding refund KAK

வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்

இது தொடர்பாக மைலாப்பூர் இந்து நிதி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், திடீரென பணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நிதி நிறுவனத்தில் தற்காலிக நிதி சிக்கல் உருவானது. இந்த நிறுவனம் 3 மாதங்களுக்குள் 35 கோடி ரூபாய் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 5 கோடி நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என தெரிவித்தார். எனவே பொய்யான வதந்திகள்,ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்பி பீதியடைய வேண்டாம் என மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஶ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் பண்ட் 525 கோடி காணவில்லையாம்.  டெபாசிட்டர் எல்லாம் பதட்டத்தில் உள்ளார்கள்.  ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் உள்ளதாம்.  இதன் தலைவர் யாருன்னா தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளர் என தெரிவித்துள்ளார். 

Customers besiege Mylapore Hindu Finance Institute demanding refund KAK

யார் இந்த தேவநாதன் .?

இதனிடையே மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முதல்வர் தேவநாதன் யாதவ், இவர் பாஜக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் நிலையில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது தனது சொத்து மதிப்பாக 206 கோடி ரூபாயை காட்டியுள்ளார். தமிழகத்தில் சொத்து மதிப்பு அதிகமாக காண்பித்துள்ள வேட்பாளர்களில்  முதல் இடத்தை ஈரோடு தொகுதி வேட்பாளரும், இரண்டாவது இடத்தை தேவநாதன் யாதவும் இடம்பிடிதுள்ளனர். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்.? வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதா.? பிரசாத் கிஷோர் அதிரடி பதில்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios