அமெரிக்கா டூ சென்னை.. 23 மணி நேர திக் திக் பயணம்.. களத்தில் இறங்கிய 2 ஆம்புலன்ஸ் விமானம்.. நடந்தது என்ன..?
அமெரிக்காவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 கோடி செலவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் 23 மணி நேர பயணத்தில் தனது தாயை, மகன்கள் சென்னைக்கு அழைத்து வந்து , தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த 67 வயதாகும் அந்த முதியவர், அமெரிக்காவில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடல்நிலையில் மிகவும் மோசமானதால், அவருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமால் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் அவர் மருத்துவ காப்பீடு செய்துள்ளதால், அமெரிக்காவில் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதானல் அவரை அமெரிக்காவில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து.
மேலும் படிக்க:கவனத்திற்கு !! முக்கிய செய்தி.. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு..? வெளியான அறிவிப்பு
பெங்களூருவில் உள்ள 'இண்டர்நேஷனல் கிரிட்டிகல் கேர் ஏர் டிரான்ஸ்பர்' எனப்படும் ஆம்புலன்ஸ் விமான சேவை நிறுவனம் மூல அவர் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து செல்ல ரூ.1 கோடி செலவாகியுள்ளது. 24 மணி நேர மருத்து கண்காணிப்புடன் அவர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவை (ஐ.சி.யூ.) கொண்ட 2 நடுத்தர விமான ஆம்புலன்ஸை பயன்படுத்தி அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி 'சேலஞ்சர் 605' எனப்படும் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மருத்துவக்குழு கண்காணிப்புடன் ஐஸ்லாந்து ரேய்க்ஜாவிக் விமான நிலையம் அழைத்து வரப்பட்டார்.
மேலும் படிக்க:அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! சேதமடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியான சி.வி.சண்முகம்
இதற்கு 71/2 மணி நேரம் எடுத்தது. அங்கு எரிபொருள் நிரப்பிய பின்பு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 6 மணி நேர பயணத்துக்கு பின்பு துருக்கி இஸ்தான்புல் நகரை ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. தொடர்ந்து புதிய மருத்துவக்குழுவினருடன் மற்றொரு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் 4 மணி நேர பயணத்துக்கு பின்பு தியார்பகிர் விமான நிலையம் வந்து, அங்கிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. குடியேற்ற நடைமுறைகள் முடிவடைந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.