Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! சேதமடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியான சி.வி.சண்முகம்

அதிமுக தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்ட சீலை நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்ட நிலையில், இன்று காலை சீல் அகற்றப்பட்டது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் சேதமடைந்த பொருட்களை அதிமுக நிர்வாகி சி.வி.சண்முகம் மற்றும் அலுவலக மேலாளர் பார்வையிட்டனர்.

Removal of seal placed on AIADMK head office after court order
Author
Chennai, First Published Jul 21, 2022, 11:16 AM IST

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு வந்து அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

திமுகவிற்கு செக் வைக்கும் அண்ணாமலை...! ஊழல் பட்டியலோடு தமிழக ஆளுநரோடு திடீர் சந்திப்பு

Removal of seal placed on AIADMK head office after court order

ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் தெரிவித்தனர். மேலும் காவல்துறை சார்பாக அதிமுக அலுவலகம் தொடர்பாக அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில்,  அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமியிடம்  அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் யாரும் உள்ளே செல்ல  அனுமதிக்ககூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதனையடுத்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 இடங்களில் சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கைக்கு வந்த கட்சி அலுவலகம்.. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் இபிஎஸ்.. தொடரும் ஓபிஎஸின் சறுக்கல்.!

Removal of seal placed on AIADMK head office after court order

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், அலுவலக ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டனர், கடந்த 11 ஆம் தேதி பொதக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் பொருட்களின் சேத விவரங்கள் தெரியாமல் இருந்தது. இதனையடுத்து இன்று காலை அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் கார்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து முன்னாள் அமைச்சர் சி,வி.சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக தலைமை அலுவக நிர்வாகிகள் கணக்கெடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்

Follow Us:
Download App:
  • android
  • ios