மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வருகிறது, அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால் ஓரளவுக்கு நிலைமையே சமாளிக்க முடிந்திருக்கிறது அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் சகஜமாக இயங்கிவரும் நிலையில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளது, தொற்று பரவல் எதிரொலியாக சென்னையில் பொது இடங்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அடத்தூ... பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவியை அறைக்கு இழுத்துச் சென்று உடலுறவு... ஐஏஎஸ் அதிகாரி செய்த அசிங்கம்..
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எனவே பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே இவற்றை கண்காணிக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒரு மண்டலத்திற்கு ஒரு குழு என குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: எகிறிய கொரோனா.. அதிர்ச்சியில் மக்கள்.. இன்று ஒரே நாளில் 16,159 பேருக்கு தொற்று பாதிப்பு
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமென கூறினார. தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அல்லது 40 சதவீதத்திற்கு மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தால் மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும்.
தமிழகத்தில் நேற்று வரை 2262 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும்கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே உள்ளது. எனவே தற்போதைய நிலையில் ஊரடங்குக்கு அவசியம் இல்லை, ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விளக்கமளித்தார்.