Asianet News TamilAsianet News Tamil

இரண்டாவது நாளாக 3000ஐ கடந்த கொரோனா பாதிப்பு..! புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடும் மத்திய அரசு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.

Corona cases in India crossed 3000 for the second day
Author
First Published Mar 31, 2023, 10:34 AM IST

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு  கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை மக்களை பாடாய் படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆயுதமாக கை கொடுத்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இருந்த போதும் அவ்வப்போது ஒமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இந்தநிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவாக பதிவான நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது. நேற்று 3016 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

வைக்கம் விழா அறிவிப்பு..! நன்றி சொல்ல அழைத்த சபாநாயகர்- தயங்கிய நயினார்- அப்புறம் நடந்தது என்ன தெரியுமா.?

Corona cases in India crossed 3000 for the second day

கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு

இதனையடுத்து இன்றும் கொரோனா பாதிப்பு 3ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 15ஆயிரத்து 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 123 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் 100% கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. எனவே விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் நாளை முதல் முகக்கவசம் காட்டாயம்.. எங்கெல்லாம் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!

Follow Us:
Download App:
  • android
  • ios