குன்னுர் பகுதியில் கோர விபத்து.. லாரியில் மோதிய பைக் - சுற்றுலா வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி!
பலத்த காயமடைந்த மனோஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜ் அந்த பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநராக பணியாற்றிவந்தது தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று மாலை கரும்பலாம் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரத்தில் சற்று மேகமூட்டமாக இருந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.
அதேபோல குன்னூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் மனோஜ் என்ற 29 வயது இளைஞரும் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு லாரியுடன் பலமாக மோதியுள்ளார் இளைஞர் மனோஜ்.
இதையும் படியுங்கள் : பூட்டி கிடந்த வீட்டில் வெடித்த மர்ம பொருள்.!
இதில் பலத்த காயமடைந்த மனோஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜ் அந்த பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநராக பணியாற்றிவந்தது தெரியவந்துள்ளது. மனோஜின் இறப்பு குறித்து அறிந்து அங்கு வந்த மனோஜின் உறவினர்கள் அவரின் உடலை கண்டு கதறி அழுத்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
குன்னுர் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தான் மனோஜ். சம்பவ இடத்திலேயே மரணமடைந்த மனோஜின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மத்திய அரசோடு எது எதற்கோ மோதும் தி.மு.க.!