எது தாழ்த்தப்பட்ட சாதி..? அதிர்ச்சியை ஏற்படுத்திய கேள்வி.. வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலை.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்தான கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்தான கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !
பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் 'எது தாழ்த்தப்பட்ட சாதி?' என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இதுக்குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக மக்களிடையே மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:சாதி வன்மத்துடன் கேள்வித்தாள் தயாரித்த ஒருத்தவனையும் விடாதீங்க.. கண்சிவக்கும் ராமதாஸ்.!
பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் எது தாழ்த்தப்பட்ட சாதி..? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் 4 சாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சமூக ஆர்வலர்களிடம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது.? பெரியார் பல்கலை. தேர்வின் கேள்வியால் சர்ச்சை...! கட்சி தலைவர்கள் ஆவேசம்
சாதிக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளை பெரும் வருத்தத்தக்கது. உடனடியாக இதில் தமிழக அரசு தலையிட்டு விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க:பெரியார் பல்கலைக் கழகத்தில் சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை
இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சி தகவலாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தற்போது சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பட்டாளர் மற்றும் நிரந்தர துறை தலைவர்கள் யாரும் இல்லாததால் பொறுப்பு பதவிகளில் தற்போது நியமனம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.