Congratulations to Arjuna Award Mariyappan
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாரியப்பனுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு.
இவர் ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஒற்றைக் காலின் வலிமையில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.
முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங்கிற்கு கேல் ரத்னா விருது வழங்கவும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாரியப்பனுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
