conference investigation Pera case to Sasikala
அதிமுக பொது செயலாளர் சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் வருவதற்கு பதில் கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா இருக்கிறார். அதனால், அவர் விசாரணைக்கு நேரில் வருவது கடினமான விஷயம். எனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
