Asianet News TamilAsianet News Tamil

வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து சாதனை... கடந்த ஆண்டைவிட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து அசத்தல்!!

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட 20 ஆயிரத்து 776 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

commercial tax and registration dept together achieved a record
Author
First Published Oct 3, 2022, 10:52 PM IST

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட 20 ஆயிரத்து 776 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் கொண்டே 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூபாய் 66,161 கோடி ஆகும். இது கடந்த வருடத்தில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூபாய் 47,873 கோடியை விட ரூபாய் 18,288 கோடி அதிகமாகும்.

இதையும் படிங்க: பூண்டி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, இருவர் மாயம்

வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எய்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1610 கோடியைத் தாண்டியுள்ளது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 8,696 கோடி ஆகும்.

இதையும் படிங்க: ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ எபிநேசர்

கடந்த வருடத்தில் அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூபாய் 2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூபாய் 20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளன என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios