பல லட்சம் நஷ்டம்.. உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு - உயிரை குடிக்கிறதா Trading Apps?

College Student Suicide : இந்த டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பம் பல்வேறு நன்மைகளை தரும் அதே நேரம் அதிர்ச்சியூட்டும் மரங்களுக்கும் அதே தொழில்நுட்பம் காரணமாகி வருகின்றது என்றால் அது மிகையல்ல.

College Student in Kanchipuram College Suicide after losing 7 lakhs in online trading apps ans

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் மொபைல் மூலம் செயல்படுத்தப்படும் டிரேடிங் ஆஃப்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்றே கூறலாம். ஆனால் உரிய பயிற்சி மற்றும் புரிதல் இல்லாமல் பலரும் இந்த ஆன்லைன் டிரேடிங் ஆஃப்களை பயன்படுத்துவதால் பல இன்னல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர் என்று கூறினால் அது மிகையல்ல. 

இந்த சூழ்நிலையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியில் படித்து வரும் மாணவர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ளது தான் சவிதா பொறியியல் கல்லூரி. 

மழையில் மின் வயர் அறுந்துபோனால் என்ன செய்ய வேண்டும்? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க!

இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு EEE படித்து வரும் மாணவர் தான் ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா. 21 வயது நிரம்பிய அந்த மாணவர் கடந்த சில வருடங்களாக ஆன்லைனில் டிரேடிங் செயல்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததாக தெரிகின்றது. டிரேடிங் செய்ய அவ்வப்போது தனது நண்பர்களிடம் அவர் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவரது அறையில் இருந்த ராமையா காலை சுமார் 5 மணி அளவில் காணவில்லை என்று கூறப்படுகிறது. உடனே அவரை தேட துவங்கிய அவரது சக நண்பர்கள், அருகில் கட்டுமான பணியில் இருந்த ஒரு அறையில் சென்று பார்த்துள்ளனர். அந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்த நிலையில் மாணவர்கள் ஒன்றிணைந்து அந்த கதவை உடைத்துள்ளனர். 

அப்போது மஞ்சள் நிற வயரில் அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு ராமையா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ராமையாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களாகவே தனது நண்பர்களிடம் அடிக்கடி ஆன்லைன் டிரேடிங்காக பணத்தைப் பெற்று அதை திருப்பி கொடுத்து வந்திருக்கிறார் ராமையா. 

இந்த சூழ்நிலையில் சுமார் 3 லட்சம் ரூபாயை தனது நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி அதை டிரேடிங்கில் பயன்படுத்தி சுமார் 7 லட்சம் ரூபாய் அவர் நஷ்டம் அடைந்த நிலையில் தான் அவர் அந்த டிரேடிங் செயலிகளால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தனது கல்லூரி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்பொழுது இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகளை ஏற்றுவதில் போட்டி; வயலுக்குள் சீறிப் பாய்ந்த தனியார் பேருந்து - திருவாரூரில் 20 பயணிகள் காயம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios