திருவில்லிபுத்துார்
திருவில்லிபுத்துாரில் நடந்த மாநில தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கோவை மாணவர் ரவிக்குமார் 16.28 நிமிடங்களில் கடந்து வெற்றிப் பெற்று புதிய சாதனை படைத்தார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 59வது குடியரசு தினவிழாவையொட்டி மாநில அளவிலான மூன்று நாள் தடகள போட்டிகள் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் நடந்தது.
தடை தாண்டும் போட்டி நிறைவு நாளான நேற்று 19 வயது மாணவர்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கோவை மண்டல மாணவர் ரவிக்குமார் 16.28 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்து முதலிடம் பெற்றார்.
திண்டுக்கல் மண்டல மாணவர் நிதிஷ்குமார் 2-ஆம் இடம் பெற்றார். 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் கோவை மண்டல மாணவர் மகாராஜா முதலிடம், மதுரை மண்டல மாணவர் வீரராகவேந்திரன் 2-ஆம் இடம், ஈட்டி எறிதல் போட்டியில் சென்னை மண்டல மாணவர் கீர்த்திகேசவன் முதலிடம், கோவை மண்டல மாணவர் ஸ்ரீநாத் 2-ஆம் இடம் பெற்றனர்.
19 வயது மாணவியர்களுக்கான போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் கோவை மண்டல மாணவி சாமினாஸ்ரீ முதலிடம், நெல்லை மண்டல மாணவி சுப்புலட்சுமி 2-ஆம் இடம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சேலம் மண்டல மாணவி லாவண்யா முதலிடம், குமரி மாவட்ட மாணவி நிதின்ஷா 2-ஆம் இடம், ஈட்டி எறிதல் போட்டியில் வேலுார் மண்டல மாணவி ஹேமமாலினி 42.56 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். மதுரை மண்டல மாணவி ஹரிதா 2-ஆம் இடம் பிடித்தார்.
