Breaking : கோவை மாவட்டத்தில் பயங்கரம்.. சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 50 அடி குழி - Auto கவிந்து இருவர் பலி - Video
கோவை மாவட்டம் வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதியில் ஆட்டோ ஒன்று குழிக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று வீரபாண்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட மருதங்கரை மேல் பதி மற்றும் கீழ் பதி மலைவாழ் பழங்குடி கிராமத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் விழாவிற்கு சென்று விட்டு மூன்று சக்கர வாகனமான ஆட்டோவில் ஐந்து பேர் பயணித்து வந்திருக்கிறார்கள்.
அப்போது சாலையோரமாக மிகப்பெரிய அளவில் 50 அடிக்கு மேல் ஆழத்தில் சட்டவிரோத செங்கல் சூளைக்காக கனிம வளம் தோண்டி எடுக்கப்பட்ட குழி ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியே வந்த அந்த ஆட்டோ நிலைதடுமாறி குழியில் விழுந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் தற்போது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கோர விபத்தில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தடாகம் காவல்துறையினர் வீரபாண்டி மற்றும் வீரபாண்டி புதூர் மக்கள் மற்றும், மலைவாழ் பழங்குடியின மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் பேருந்தில் தீ விபத்து; நடு ரோட்டில் அலறியடித்து ஓடிய பயணிகள் - சேலத்தில் பரபரப்பு