கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் ஏப்.9 முதல் இயக்கம்... இயங்கும் நேரங்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!!
கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஏப்.8 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதை அடுத்து இந்த ரயில் இயங்கும் நேரங்கள் குறித்து விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
இதையும் படிங்க: மீண்டும் முதல்வரின் செயலாளரானார் அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்... யார் இவர்?
செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, காலை 6.37 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்படும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடைந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.
இதையும் படிங்க: 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.