சிறந்த கைத்தறி நெசவாளர் விருது.. 6 நெசவாளர்களுக்கு 20 லட்சம் மதிப்பிலான காசோலை.. முதலமைச்சர் சிறப்பிப்பு..

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 

CM Stalin today gave prizes to the best weavers

அப்போது பேசிய அவர்,”கைத்தறி தொழிலில்‌ இந்திய அளவில்‌ தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதுடன்‌, உலகளவில்‌ பிரசித்தி பெற்ற கைத்தறி இரகங்கள்‌ நெசவாளர்களால்‌ இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில்‌ வேறு எந்த மாநிலத்திலும்‌ இல்லாத வகையில்‌ தமிழ்நாட்டில்‌ அரசின்‌ மேற்பார்வையின்‌ கீழ்‌ 1,107 கைத்தறி நெசவாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ செயல்பட்டு வருகின்றன.இச்சங்கங்கள்‌ மூலம்‌ நெசவாளர்களுக்கு தொடர்‌ வேலைவாய்ப்பும்‌, உத்திரவாதமான கூலியும்‌, பல்வேறு நலத்திட்ட உதவிகளும்‌ அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி, விசைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ பிரிவுகளின்‌ ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும்‌, நெசவாளர்களின்‌ நலனுக்காகவும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

மேலும் படிக்க:அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு ஆக்க இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்.

2021-2022-ஆம்‌ ஆண்டுக்கான கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை மானியக்‌ கோரிக்கையில்‌ "மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர்‌ விருது வழங்கும்‌ திட்டத்தின் கீழ்‌ பரிசுத்‌ தொகை உயர்த்தி வழங்கப்படும்‌" என அறிவிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அந்த அறிவிப்பிற்கிணங்க, தற்போது மாநில அளவிலான பட்டு ஜரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்‌ விருது மற்றும்‌ பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்‌ விருதுக்கான முதல்‌ பரிசிற்கான பரிசுத்‌ தொகை ஒரு லட்சம்‌ ரூபாயிலிருந்து 5 இலட்சம்‌ ரூபாயாகவும்‌, இரண்டாம்‌ பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம்‌ ரூபாயிலிருந்து 3 லட்சம்‌ ரூபாயாகவும்‌, மூன்றாம்‌ பரிசிற்கான பரிசுத்‌ தொகை 50 ஆயிரம்‌ ரூபாயிலிருந்து 2 லட்சம்‌ ரூபாயாகவும்‌ உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க:சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்திற்கு 14 நாள் நீதி மன்ற காவல்... சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உத்தரவு.

இந்நிலையில் 2021-2022 ஆம்‌ ஆண்டுக்கான மாநில அளவில்‌ பட்டு இரகத்திற்கான விருதுகளையும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்‌ விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மொத்தம் 6 விருதாளர்களுக்கு மொத்தம்‌ 20 லட்சம்‌ ரூபாய்க்கான காசோலைகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.மேலும்‌ சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்‌ விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை அமைச்சர் காந்தி, தலைமைச்‌ செயலாளர்‌ இறையன்பு, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தர்மேந்திர பிரதாப்‌ யாதவ்‌, கைத்தறித்‌ துறை ஆணையர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

மேலும் படிக்க:ஆளுநரா? நியமன எம்பியா? ஆர்.என்.ரவியோடு ரஜினிகாந்த் சந்தித்ததில் பின்னனி என்ன..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios