ஆளுநரா? நியமன எம்பியா? ஆர்.என்.ரவியோடு ரஜினிகாந்த் சந்தித்ததில் பின்னனி என்ன..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை  ஆளுநராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

What is the background of actor Rajinikanth meeting with Tamil Nadu Governor RN Ravi

ஆட்சி மாற்றமும் ரஜினியும்

தமிழக ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து மொழி ரசிகர்களையும் தனது ஸ்டைலாலும் நடிப்பாலும் தன் வசப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பட வசனத்தின் மூலம் அரசியல் தொடர்பாக கருத்துகளை பேசி உற்சாகப்படுத்தினார். மேலும் 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை விமர்சித்து திமுக- தமாக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தமிழக மக்களை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக திமுக கூட்டணி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு ரஜினி தான் முக்கியமான காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தான் நடித்த படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை பேசியது தமிழக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முத்து திரைப்படத்தில் எப்போ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என கூறி இருப்பார். இந்த வசனம் அரசியலுக்காகத்தான் ரஜினி பேசியதாக கூறப்பட்டது. இதனையடுத்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

What is the background of actor Rajinikanth meeting with Tamil Nadu Governor RN Ravi

இப்போ இல்லைனா எப்போதும் இல்லை

இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும், இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லையென கூறினார். இதனையடுத்து தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்த ரஜினி, கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் தொடங்கினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரம் அடைந்தது. இந்தியாவையும் கொரோனா பாதிப்பு விட்டு வைக்கவில்லை இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்பால் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டது.  அப்போது நடிகர் ரஜினி காந்திற்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது அரசியல் பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ரஜினி, தனது உடல் நிலை பாதிப்பால் அரசியலுக்கு வரவில்லையென தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மட்டுமிட்டாமல் பாஜகவினரையும் அதிர்ச்சி அடையவைத்தது. ரஜினி தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என பாஜக திட்டமிட்டிருந்தது. 

ஆர்எஸ்எஸ்க்கு திருமாவளவன் பாடம் எடுக்க தேவையில்லை.. எகிறி அடித்த எல்.முருகன்.

What is the background of actor Rajinikanth meeting with Tamil Nadu Governor RN Ravi

ஆளுநரோடு திடீர் சந்திப்பு ஏன்.?

இதனையடுத்து அன்னாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்தார், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை மேலும் அந்த படம் ரசிகர்களால் விமர்சிக்கவும் பட்டது.  இதனையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினி காந்திற்கு ஆளுநர் பதவியோ அல்லது நியமன எம்பி பதவியோ மத்திய பாஜக அரசு சார்பாக வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை  இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அரசியல் தொடர்பாக பேசியதாகவும் ரஜினி தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலை நடிகர் ரஜினி காந்திடம்  ஆளுநர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. எனவே இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது கருத்தை தெரிவிப்பதாக ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆளுநர் ஆர்.என்.ரவியோடு அரசியல் குறித்து பேசினேன்..! நடிகர் ரஜினி காந்த் பரபரப்பு தகவல்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios