ஆர்எஸ்எஸ்க்கு திருமாவளவன் பாடம் எடுக்க தேவையில்லை.. எகிறி அடித்த எல்.முருகன்.
தேசிய கொடி பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு திருமாவளவன் பாடம் எடுக்கத் தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நாட்டின் 65வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசிய கொடிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
.
தேசிய கொடி பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு திருமாவளவன் பாடம் எடுக்கத் தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நாட்டின் 65வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசிய கொடிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திர தின விழா இன்று ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றுப்படுமா என திருமாவளவன் கேள்வி எழுப்பிய நிலையில் வேல்முருகன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவியோடு நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு..! காரணம் என்ன..?
நாட்டின் 65வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கும் நடவடிக்கையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாட்டு மக்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா: ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி புகழாரம்!!
ஆனால் ஆர்எஸ்எஸ் அலுவலர்களின் தேசியக்கொடி ஏற்றப்படுமா என கேள்வி எழுப்பினார் அவரின் இந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் வேல்முருகன் காட்டமாக பதில் அளித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற பாஜக பிற மொழிகள் பிரிவு நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எல்.முருகன் நிகழ்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- பிற மொழியை சேர்ந்தவர்கள் சென்னையில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவ்ரகளில் பலர் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள்.
பிற மொழியை சேர்ந்தவர்கள் மத்திய பாஜக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களிடம் மேலும் பாஜகவை வளர்க்க பாஜக பிற மொழிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. நாட்டிற்காக தியாகம் செய்தவர்களைப் போற்றும் வகையில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தேசியக்கொடி வழங்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்படுமா என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமா கேள்வி எழுப்புகிறார்,
நான் அவருக்கு ஒன்றும் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசியக் கொடிகளை வழங்கிவருகிறது. எனவே ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தேசிய கொடி பற்றி திருமாவளவன் பாடம் எடுக்க தேவையில்லை அவர் கூறியுள்ளார்.