Asianet News TamilAsianet News Tamil

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா: ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி புகழாரம்!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மிகவும் புத்திசாலித்தனமாக பேசக் கூடியவர். அனைத்து மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை. இளைஞர்களுக்கு என்று அதிக நேரத்தை ஒதுக்கி இருக்கிறார் என்று ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். 

PM Modi praises VP Venkaiah Naidu in the Rajya sabha
Author
First Published Aug 8, 2022, 11:49 AM IST

நாம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரும் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், நாட்டின் ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாக, சபாநாயகராக, பிரதமராக இருப்பவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர்கள். அதுவும், இவர்கள் அனைவருமே எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். 

நான் தொடர்ந்து வெங்கையா நாயுடுவுடன் பணியாற்றி வந்து இருக்கிறேன். அவர் ஒவ்வொரு பணியையும் சிரம் மேற்கொண்டு, தனிப் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார். மிகவும் நகைச் சுவையாக பேசக் கூடியவர். அவர் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் ஆழம், பொருள் இருக்கும். 

அவர் பல மொழிகளில் வல்லமை பெற்றவர். அவர் சபையை திறமையாக செயல்படுத்தியதில் இருந்தே இது தெரிய வரும். ராஜ்ய சபா திறம்பட செயல்பட செயல்பட்டவர்.

உங்களை வெவ்வேறுபட்ட செயல்பாடுகளில் அருகில் இருந்து பார்த்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இந்த செயல்பாடுகளில் சிலவற்றில் உங்களுடன் இணைந்து பணியாற்ற எனக்கு பாக்கியம் கிடைத்தது. கட்சி தொண்டராக உங்களது கொள்கையாக இருக்கட்டும், எம்எல்ஏவாக, எம்பியாக நீங்கள் பணியாற்றியது அனைத்தும் உடன் இருந்து பார்த்துள்ளேன்.   

nitish kumar: bihar: bjp: நிதிஷ் குமார்-பாஜக உறவு முறிகிறது? பிஹாரிலும் கைவரிசையை காட்டிய பாஜக: காரணம் என்ன?

கட்சித் தலைவராக, அமைச்சரவையில் உங்களது கடின உழைப்பு, துணை ஜனாதிபதியாக, ஆர்எஸ் தலைவராக என அனைத்து துறைகளிலும் நீங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக செயல்பட்டு வந்து இருக்கிறீர்கள். எதையும் பாரம் என்று ஒருபோதும் நீங்கள் நினைக்கவில்லை. ஒவ்வொன்றிலும், புதிய வாழ்க்கையை சுவாசித்தீர்கள்'' என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

கேலோ இந்தியா திட்டம்... தமிழகத்துக்கு ரூ.33 கோடி… அதிகபட்சமாக குஜராத்துக்கு ரூ.608.37 கோடி நிதி ஒதுக்கீடு!! 

புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக் காலம் முடிந்து இன்று அவருக்கு ராஜ்ய சபாவில் வழியனுப்பு விழா நடந்தது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios