ஆளுநர் ஆர்.என்.ரவியோடு நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு..! காரணம் என்ன..?
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினி காந்த் சந்தித்து பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடுமுழுவதும் அதிக ரசிகர்களை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. மேலும் கடைசியாக வெளியான அவரது அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத காரணத்தால் இளம் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற படத்தில் கமிட் ஆனார். இந்த படம் தொடர்பாக மாஸ் கிளப்பும் வகையில் வீடியோ பதிவு வெளியானது. ஆனால் இதனை தொடர்ந்து இந்தப்படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ஜெயிலர் படம் என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லிக்கு சென்றிருந்த ரஜினி காந்த் நேற்று சென்னை திரும்பினார். அப்போது ஜெயிலர் படம் எந்த நிலையில் உள்ளது. அடுத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு நடிகர் ரஜினி தனது ஸ்டையில் அடுத்து ஷூட்டிங் தான் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பழனிக்கு சென்ற பழனிசாமி...! ஜோசியர் சொன்னதால் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டாரா இபிஎஸ்..?
. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் கிண்டி ராஜ்பவனில் உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தற்போது பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது அரசியல் வட்டார த்தில் மட்டுமில்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை அரசு நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் ரவி பேசுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நடிகர் ரஜினி காந்த் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை ரீதியிலான சந்திப்பாக கூறப்பட்டாலும், தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்