அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு ஆக்க இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்.
அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலுயுறுத்தியுள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வாழ்க்கை தெரிந்துகொண்டு அவர்களை போற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலுயுறுத்தியுள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வாழ்க்கை தெரிந்துகொண்டு அவர்களை போற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் நாட்டின் 65வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 20 ஆயிரம் மாணவர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தி உலக சாதனை படைத்தனர்.அதில் உலக சாதனை சான்றிதழ், உலக சாதனை யூனியன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் வழங்கினார். ஏசிஎஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி சண்முகம், அதன் தலைவர் அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாட்டின் 65வது சுதந்திரதினத்தை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இச்சூழ்நிலையில் இந்திய இளைஞர்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை அறிந்து அவர்களை போற்ற வேண்டும் என்றார்.
மகாகவி பாரதியார் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார், ஆனால் அவரது பாடல்கள் சுதந்திர வேட்கையை தட்டியெழுப்பியது என்றார். நாட்டின் 65வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டை வல்லரசாக வேண்டும், அதற்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மருத்துவ மாணவர்கள் படிப்பு முடித்தபிறகு ஹிப்போகிராடிக், உறுதிமொழி ஏற்று தன்னிடம் சிகிச்சைக்கு வரும் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும், தொழிற்சாலைகள் மூலம் நாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.