Asianet News TamilAsianet News Tamil

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி முதலமைச்சர் ஆணை..

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 

CM Stalin order to increase the pension of Siddha, Unani, Ayurveda, Homeopathy Doctors
Author
First Published Sep 22, 2022, 12:57 PM IST

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000  மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 11 ஓய்வுபெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

CM Stalin order to increase the pension of Siddha, Unani, Ayurveda, Homeopathy Doctors

மேலும் படிக்க:சுத்து போட்டு அதிமுக முக்கிய நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு! கூலிப்படை வெறிச்செயல்.. வெளியான பகீர் காரணம்

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011ஆம் ஆண்டு ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. 

CM Stalin order to increase the pension of Siddha, Unani, Ayurveda, Homeopathy Doctors

தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000  தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவே தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000 லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கிட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.  

மேலும் படிக்க:ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் 1 கோடி பரிசு... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது..!

அதன் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஓய்வூதியம், நடப்பு ஆண்டு முதல் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000 க்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் படிக்க:ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் தாய் தான் வருத்தப்பட வேண்டும்.. செல்லூர் ராஜூ ஆவேசம்

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios