ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் 1 கோடி பரிசு... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது..!
அண்மையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவின் போது திமுக எம்.பி. ஆ. ராசா, இந்து மதம் குறித்து மிகவும் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் எதிராக ஆ.ராசா பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி. ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டுவந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்ட இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அண்மையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவின் போது திமுக எம்.பி. ஆ. ராசா, இந்து மதம் குறித்து மிகவும் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் எதிராக ஆ.ராசா பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- திமுகவின் இந்து விரோத முகம் அம்பலமான விரக்தியில் பாஜக தலைவர் கைது.. ஆளுங்கட்சியை அலறவிடும் வானதி சீனிவாசன்.!
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (46). இந்து மக்கள் புரட்சி படை மாநில அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அன்னிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்.பி. ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் எனக்கூறி வரும் அரசியல் விபச்சாரியே. ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ரூபாய் ஒரு கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பாக திமுகவினர் ஆதாரத்துடன் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்