MK Stalin Demand Fair Delimitation : தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுதி மறுவரையறை என்ற கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
MK Stalin Demand Fair Delimitation : சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் எனறு குறிப்பிட்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/DKe0wQ7TZ_p/?utm_source=ig_web_copy_link
