தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள் மற்றும் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
திமுக முன்னாள் எம்பி மஸ்தானை கொலை செய்துவிட்டு நாடகமாடிய 5 பேர் அதிரடி கைது
அந்த வகையில், சென்னை மாவட்டம் – முத்தாப்புதுப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் – மானூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் – திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் 3 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையக் கட்டடங்கள்;
சென்னை மாவட்டம் – ஆவடியில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் சமூதாயநலக்கூடம் மற்றும் தருமபுரி மாவட்டம் – தருமபுரியில் 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம்;
புதுக்கோட்டையில் சர்ச்சைக்குள்ளான கோவிலில் சமத்துவ பொங்கல்; ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
திருவாரூர் மாவட்டம் – திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் –கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள்.
என மொத்தம், 23 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
