Budget: தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒன்றும் இல்லையா.? யார் சொன்னது.! ரயில்வே திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகமென ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Clarification of Central Government regarding allocation of funds to Tamil Nadu for railway projects in the budget kak

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள்

பாஜக அரசின் மத்திய பட்ஜெட் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை, நிதியும் ஒதுக்கவில்லையென கூறப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அதில்,சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம்,  திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பூர். திருவண்ணாமலை,

வேலூர், சேலம் அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Budget 2024: பட்ஜெட்டில் இவ்வளவு பாரபட்சம் ஏன்? INDIA கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி!

Clarification of Central Government regarding allocation of funds to Tamil Nadu for railway projects in the budget kak

புதிய பாதை அமைக்க 22 திட்டங்கள்

2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 2,152 கிமீ தொலைவுக்கான ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது என கூறினார்.  687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Clarification of Central Government regarding allocation of funds to Tamil Nadu for railway projects in the budget kak

கேரளாவில் ரயில் நிலையம் மேம்பாடு

இதே போன்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு 3,011 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 106 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், குருவாயூர், திருச்சூர், புனலூர், சாலக்குடி, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட 35 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும்.

மேலும் அம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 13 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 49 கிமீ தொலைவுள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

“பழிவாங்குவதில் கவனம் செலுத்தாதீர்கள் பிரதமரே” தனிமைப்பட்டு விடுவீர்கள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios