Budget 2024: பட்ஜெட்டில் இவ்வளவு பாரபட்சம் ஏன்? INDIA கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி!

மத்திய பட்ஜெட் மூலமாக நாட்டில், NDA கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களில் பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டதாகக்கூறி INDIA கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

India Alliance parties MPs protested in front of parliament today against budget 2024

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 2024-25ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பெண்கள் முன்னேற்றம், இளைஞர் திறன் மேம்பாடு, உள்ளிட்ட 9 வகையான நோக்கங்களோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு நல்ல திட்ட அறிவிப்புகள் இருந்தாலும், என் டி ஏ கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநிலங்களில் திட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லை எனலாம்.

INDIA கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் பீகார் & ஆந்திரா மாநிலங்களில் திட்டங்கள் அதிகளவில் அறிவிக்கப்பட்டதோடு, நிதியும் அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநிலங்களுக்கு முறையாக எந்த திட்டங்களும் அறிவிக்கப்பட வில்லை என்றும், போதிய நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் INDIA கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் ''தமிழ்நாடு'' என்ற வார்த்தை இல்லேவே இல்லை என திமுக எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

நேற்றே பட்ஜெட் தாக்கலின் போது கொந்தளித்த INDIA கூட்டணி எம்பிக்கள், மக்களவை நேரத்திற்கு பின்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்பிக்களும் கலந்துகொண்டனர். அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு திரண்ட INDIA கூட்டணி எம்பிக்கள், பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு உள்பட INDIA கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதி நிதி ஒதுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios