01:51 PM (IST) Feb 01

Budget 2025 - தொழிலாளர் அடையாள அட்டை!!

01:49 PM (IST) Feb 01

நிர்மலா சீதாராமன் கூறிய திருக்குறள்!!

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது கூறிய திருக்குறள் என்ன?

மேலும் படிக்க: Budget 2025: மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறள்!

01:07 PM (IST) Feb 01

பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்!!

பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்; விலை அதிகரிக்கும் பொருட்கள் முழு விபரம்!!

மேலும் படிக்க: பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்; விலை அதிகரிக்கும் பொருட்கள் முழு விபரம்!!

12:55 PM (IST) Feb 01

ரூ.6 லட்சம் வரை வாடகை வருவாய்க்கு வரியில்லை

ரூ.6 லட்சம் வரையிலான வாடகை வருவாய்க்கு இனி TDS வரிப்பிடித்தம் கிடையாது. இதுவரை ரூ.2.40 லட்சத்திற்கு மேலான வாடகை வருவாய்க்கு TDS வரிப்பிடித்தம் அமலில் இருந்தது.

12:49 PM (IST) Feb 01

பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாருக்கு அறிவித்த திட்டங்கள்

இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும். பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும் பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள். பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும். தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

12:34 PM (IST) Feb 01

உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு!!

உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு வரிவிலக்கு.. பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

12:27 PM (IST) Feb 01

ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு

அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு
என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

12:24 PM (IST) Feb 01

Income Tax: ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை!

Budget 2025; ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற பெரிய பரிசை மக்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்து இருக்கிறார்.

மேலும் படிக்க: Budget 2025: வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

12:20 PM (IST) Feb 01

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இதனால் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர் வருமான வரி கட்ட அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.

12:13 PM (IST) Feb 01

பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன்!!

Budget 2025: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு கம்பீரமாக வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்! நாடாளுமன்றம் வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

12:10 PM (IST) Feb 01

எந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும்?

Budget 2025: பட்ஜெட்டில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானம், புகையிலை மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் மீதான வரிகள் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க: பட்ஜெட் 2025: எந்த பொருட்கள் விலை குறையும், எவை அதிகரிக்கும்? முழு லிஸ்ட் இங்கே

12:08 PM (IST) Feb 01

லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்டரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

12:07 PM (IST) Feb 01

இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள்!!

இளைஞர்களின் திறனை வளர்க்கும் வகையில் தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Budget 2025 : இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் சூப்பர் திட்டங்கள் அறிவிப்பு!!

12:04 PM (IST) Feb 01

அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள்! நிர்மலா சீதாராமன்

2033ம் ஆண்டிற்குள் நாட்டில் புதியதாக 5 அணு உலைகள் அமைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

12:04 PM (IST) Feb 01

Budget 2025: உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு

36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் இன்றும் மட்டும் வசூலிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:58 AM (IST) Feb 01

மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது

ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:57 AM (IST) Feb 01

Budget 2025 - கிசான் கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!!

2025 மத்திய பட்ஜெட்டில், கிசான் கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு, தானியம், பஞ்சு உற்பத்திக்கு சிறப்புத் திட்டங்கள் மற்றும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் புதிய திட்டங்களும், 100 மாவட்டங்களில் வேளாண் வளர்ச்சிக்கு ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

11:57 AM (IST) Feb 01

புதிய வருமான வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல்

புதிய வருமான் வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், 60 ஆண்டுகாலமாக இருக்கும் வருமான வரி சட்டத்தை மாற்றும் வகையில் மசோதா இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். 

11:55 AM (IST) Feb 01

புதிய வருமான வரி மசோதா தாக்கல் எப்போது?

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Budget 2025: புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்! பட்ஜெட்டில் அறிவிப்பு

11:50 AM (IST) Feb 01

Budget 2025-26: மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்!!

மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Budget 2025 : மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்! நிதியமைச்சர் அறிவிப்பு!