Asianet News TamilAsianet News Tamil

குவாட்டருக்கு விலை உயர்வா? குரலை உயர்த்தும் 'குடி'மகன்கள்....! 

Citizens were protesting against the price rise of alcohol in the next Mayandur.
Citizens were protesting against the price rise of alcohol in the next Mayandur.
Author
First Published Oct 13, 2017, 4:06 PM IST


ஆரணியை அடுத்த மாமண்டூரில் மதுபானங்களின் விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் டாஸ்மாக் கடையை மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரைவை கூட்டம் நடைபெற்றது

இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு அளித்த பரிந்துரையின் படி, ஊதியம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது .மேலும் மதுபானங்களின் விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. 

காரணம் தமிழகத்தில், 3000 கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டதன் விளைவாக விற்பனை குறைந்து போன நிலையில்,மாநில அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டும்,நஷ்டத்தை ஈடுசெய்யவும்  மதுபானங்களின் விலை உயர்த்த  திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்படி பீருக்கு 10 ரூபாயும், குவார்ட்டருக்கு 12 ருபாயும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆரணியை அடுத்த மாமண்டூரில் மதுபானங்களின் விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் டாஸ்மாக் கடையை மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios