குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் தலைவராக புதிய ஒருவரை நியமிக்க அரசுக்கு ஜன.2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை நியமித்ததை மறுபரிசீலனை செய்து புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் குழந்தைகள் காப்பகங்களை கண்காணிக்கும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமே முறைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுந்த நபரை நியமிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த மனு கடந்த நவம்பர் 5ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் வந்தபோது, மதுரை காமராசர் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளதாக அரசு தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர் நாராயணன் குறுக்கிட்டு, அவசர கோலத்திலும், வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

 அப்போது நீதிபதிகள், இந்த விசயத்தில் ஏற்கனவே நீதிமன்றங்கள் விதி்த்துள்ள விதிமுறைகளையும், குழந்தைகள் நல பாதுகாப்புசட்ட விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி தலைவர் நியமனத்தை மறு ஆய்வு செய்து தகுதியான நபர்களை நியமிக்காவிட்டால், நீதிமன்றம் தலையிட நேரிடும் என எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இரண்டு வார கால அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். கல்யாணி மதிவாணன் நியமனம் மறு ஆய்வு செய்து, புதியவரை நியமிக்க கால அவகாசம் கோரியபோது, மனுதாரர் குறுக்கிட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்த பதவியிடம் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை என தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, அரசின் தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள் (analyse the current difficult situation...) என மனுதாரரிடம் தெரிவித்தார். ஆனால் அதன்பிறகு பேசிய பாடம் நாராயணன், நள்ளிரவில் கூட பதவியேற்க அரசு அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்யும்போது, குழந்தைகளுக்காக யோசிக்க முடியவில்லை என கூறினார்.

அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அரசு தரப்பை பார்த்து கால அவகாசம் வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

 அதனை ஏற்ற நீதிபதிகள் காவ அவகாசம் வழங்கி வழக்கை 2017 ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.