நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமை உண்டு. இத்தகைய ஒரு அடிப்படை, ஜனநாயகக் கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்?
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஒரு இடத்தில் மக்களை சந்திக்க சென்றார். அவர் காரை விட்டு இறங்கியதும் இளைஞர் ஒருவர் ஜோதிமணி எம்.பி பக்கம் நோக்கி நடந்து சென்று ஏதோ கேட்க முயன்றார். அப்போது எம்.பி உடன் இருந்த ஒருவர் அந்த இளைஞரை 'அந்த பக்கம் போடா' என்று ஆவேசமாக தள்ளினார். அதற்கு அந்த இளைஞர் 'என்னை அடித்து விடுவீர்களா' என்று எதிர்த்து நின்றார்.
எம்.பி ஜோதிமணியிடம் கேள்வி கேட்க வந்த இளைஞர்
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அந்த இளைஞரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்கும்போது அவரை ஏன் மிரட்ட வேண்டும்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமை உண்டு
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''வெற்று அரசியல் பேச்சுகளுக்கு அப்பால், என்னென்ன உறுதியான பங்களிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமை உண்டு. இத்தகைய ஒரு அடிப்படை, ஜனநாயகக் கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்?
ஆழ்ந்த உறக்கத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்
இந்தக் கேள்வி கரூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் உரியது அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக, 'இந்தியா' கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். கேள்விகளுக்கு உண்மைகளுக்குப் பதிலாக முஷ்டிகளாலும் மிரட்டல்களாலும் பதிலளிக்கப்படும்போது, அது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்'' என்று தெரிவித்துள்ளார்.


