அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா 9 ஆம் தேதி முதலைமைச்சராக பதவி ஏற்க உள்ளார்
இன்னும் 4 நாட்களில் தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார்
இது மக்களுக்கான அரசாக இருக்கும் என அவர் இன்று கூறியுள்ள நிலையில் தனது இன்டெர்னல் வேலைகளை செய்ய தொடங்கிவிட்டார்
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது பல முறை அழைத்தும் சென்று பார்க்காத தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வேறு வழியின்றி சசிகலாவை சென்று சந்தித்துள்ளார்
அவர் சசிகலா உடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறபடுகிறது ,கிரிஜா மட்டுமின்றி வேறு சில மூத்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகளும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளனர்
