கிராமப்புற மக்களின் குரல் எப்போதும்,எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்கனும்.!கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருப்பதாக கூறினார். 
 

Chief Minister Stalin requested that the voice of the rural people should always be heard in any situation KAK

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி இன்று தமிழகம் முழுவதும் 12,525 இடங்களில் கிராம சபை கூட்டமானது நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆற்றிய உரையில்,  நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக – தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல கிராம சபைக் கூட்டங்களை தடையில்லாமல் நடத்துகிறோம். மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. 

 

உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும்  ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. 

Chief Minister Stalin requested that the voice of the rural people should always be heard in any situation KAK

சோழப் பேரரசில் ‘ஊர் மற்றும் மகாசபை’ என்கிற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.  இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது. 

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கிராம சபைகள் பல சிறப்பு செய்கைகளைச் செய்கிற வகையில், நலிந்தோர்க்கும், வறியோர்க்கும் உதவி செய்ய மாற்றுத் திறனாளிகள் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிட வேண்டும்.  கல்விக்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகள் எல்லாவற்றிலும் கிராம சபைகள் முக்கியப் பாலமாக இருக்க வேண்டும். 

Chief Minister Stalin requested that the voice of the rural people should always be heard in any situation KAK

இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று. கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும்.  ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும். நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், *தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் – போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல்,  முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் - போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Chief Minister Stalin requested that the voice of the rural people should always be heard in any situation KAK

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே –  மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. “ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக – தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும்.

இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம். இன்று அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார். தற்சார்புள்ள கிராமங்கள் – தன்னிறைவு பெற்ற கிராமங்கள் –  எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள் –  சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் – ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும்,  உழைக்கும், உழைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

காந்தி ஜெயந்தி..! மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios