Asianet News TamilAsianet News Tamil

காந்தி ஜெயந்தி..! மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 

Prime Minister Modi and Congress leaders pay homage at Mahatma Gandhi Memorial KAK
Author
First Published Oct 2, 2023, 8:50 AM IST | Last Updated Oct 2, 2023, 8:56 AM IST

காந்தி ஜெயந்தி - நினைவிடத்தில் மரியாதை

மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய காந்தியின் பிறந்த நாள் விழாவை சர்வதேச அகிம்சை தினமாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில்  மத்திய அரசு சார்பாக நேற்று ஒரு மணி நேரம் தூய்மை பணி இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதனை எடுத்து இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை டெல்லி டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Prime Minister Modi and Congress leaders pay homage at Mahatma Gandhi Memorial KAK

பிரதமர், முதல்வர் மரியாதை

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதே போல சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் இன்று (02.10.2023) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், காந்தியடிகள் அவர்களின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். 

இதையும் படியுங்கள்

பொதுமக்களுக்கு அலர்ட்...! சென்னையில் இன்று மின்சார ரயில் இயங்காது.? எத்தனை மணி வரை.? ஏன் இயங்காது.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios