பொதுமக்களுக்கு அலர்ட்...! சென்னையில் இன்று மின்சார ரயில் இயங்காது.? எத்தனை மணி வரை.? ஏன் இயங்காது.?

சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Electric train service in Chennai has been canceled for maintenance work KAK

மின்சார ரயில் இயங்காது

சென்னை வாழ் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மின்சார ரயில் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. இதனை பயன்படுத்தி தங்களது பணிகளுக்கு சென்று வரவும், வெளியூர் பயணிகள் முக்கிய இடங்களுக்கு சென்று வரவும் குறைந்த கட்டணத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட முறை சென்னை பீச்சில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை ரயில்கள் சென்று வருகிறது. இந்தநிலையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இன்று காலை முதல் மாலை வரை  மின்சார ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Electric train service in Chennai has been canceled for maintenance work KAK

மின்சார ரயில் சேவை ரத்து- காரணம் என்ன.?

சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம் தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையானது இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பணிக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், சென்னையில் முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Electric train service in Chennai has been canceled for maintenance work KAK

எத்தனை மணி வரை இயங்காது.?

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10.30 முதல் மதியம் 2.30 மணி வரை மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில்கள் முழுவதுமாக நாளை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை மற்றும் பேருந்துகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையும் படியுங்கள்

தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை அதிகரித்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios