மர்ம நபர்களால் ஓமன் நாட்டில் தமிழக மீனவர் கடத்தல்...மீட்டு தர கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தை சேர்ந்த பெத்தாலிஸ் என்பவரை ஓமன் நாட்டில் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாகவும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Chief Minister Stalin request to central government to rescue abducted Tamils in oman KAK

ஓமனில் தமிழர் கடத்தல்

தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வெளிநாட்டில் பணி நிமிர்த்தமாக சென்றுள்ளனர். இந்தநிலையில் ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்  பெத்தாலியை  மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த  கடிதத்தில் ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.  

அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில் திரு பெத்தாலிஸ் அவர்களை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Chief Minister Stalin request to central government to rescue abducted Tamils in oman KAK

மீட்டு தர முதலமைச்சர் கோரிக்கை

எனவே பெத்தாலியை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு தபெத்தாலிஸ் அவர்களது மனைவி திருமதி ஷோபா ராணி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம்  பெத்தாலிஅவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களைக்கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..? விடியாமலேயே விடியல் தருவதற்கு? ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios