எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..? விடியாமலேயே விடியல் தருவதற்கு? ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்
சாதிவாரிய கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த ராமதாஸ், எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..... விடியாமலேயே விடியல் தருவதற்கு? என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும் பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும் இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும் பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது இந்தநிலையில் நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
இதனை தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல தமிழக அரசும் கணக்கெடுப்பை நடத்த பாமக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு சார்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
முதலமைச்சரை விளாசும் ராமதாஸ்
இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அவர்கள் அறியாமல் பிழை செய்து விட்டார்கள்... மன்னியும்! ’’ நாங்கள் அறியாமல் பிழை செய்து விட்டோம், எங்களை மன்னித்து விடும்” என்பது தான் பிகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கர்நாடகம், ஒதிஷா மாநிலங்களின் முதலமைச்சர்களும் தினமும் உதிர்த்துக் கொண்டிருக்கும் சொற்களாம். ஆமாம்.... ஒற்றைக் கடிதத்தில் சமூகநீதியை பாதுகாப்பதை விடுத்து,
கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, லட்சக்கணக்கில் அரசு ஊழியர்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கைகளை தயாரித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறோமே? என்பது தான் அவர்களின் கவலையாம். அதானே... எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..... விடியாமலேயே விடியல் தருவதற்கு? என ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்