Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. அரசு சொன்ன குட்நியூஸ்..!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும்  திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Chief Minister Stalin presented the Pongal gift package KAK

பொங்கல் கொண்டாட்டம்

உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும். கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, 

Chief Minister Stalin presented the Pongal gift package KAK

பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர்

ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், ஆகியவற்றை 2,19,71,113 குடும்பங்களுக்கு 2436.19 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 இலட்சம் வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

Chief Minister Stalin presented the Pongal gift package KAK

டோக்கன் படி பொங்கல் தொகுப்பு

அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1.000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.1.2024) சென்னை. ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகைக்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தக்காளி, வெங்காயம் விலை என்ன.? சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கூடியதா.?குறைந்ததா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios