Asianet News TamilAsianet News Tamil

மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் குளித்த 5வயது சிறுவன் மூச்சு திணறி பலி.! விசாரணை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர்

சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்
 

Chief Minister Stalin orders probe into death of 5 year old boy who took bath in Marina beach swimming pool
Author
First Published Aug 27, 2023, 12:09 PM IST

நீச்சல் குளம் - சிறுவன் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ தனது குடும்பத்தோடு வந்த 5 வயது சிறுவன் வந்துள்ளான். நேற்று சனிக்கிழமை என்பதால் அதிகளவு கூட்டம் இருந்ததுள்ளது. அப்போது சிறுவன் அனிருத் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூச்சு திணறி தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் நேற்று (26-8-2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன்,

Chief Minister Stalin orders probe into death of 5 year old boy who took bath in Marina beach swimming pool

 விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்.  சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நாடு முழுவதும் 50 பேருக்கு நல்லாசிரியர் விருது.! தமிழகத்தை சேர்ந்த அந்த 2 நல்லாசிரியர் யார் தெரியுமா.?
 

Follow Us:
Download App:
  • android
  • ios