மதுரையை சேர்ந்த ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை மாலதிக்கும் மத்திய அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தின விழா- விருது அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் ஆசிரியர் தினத்தன்று சிறப்பாக பணியாற்ற ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 50 நல்லாசிரியர்கள் விருது பெறுபவர்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் இரண்டு பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு விருது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம்,கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை திருமதி.மாலதி அவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது பெறுபவர்களுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டர் பதிவில்,

Scroll to load tweet…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம்,கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை திருமதி.மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை.. மற்றொரு ஆசிரியை கணவர் பகீர் தகவல்.. நடந்தது என்ன?